முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் ராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 21ம் தேதி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி தமிழக முழுவதும் உள்ள காங்கிரஸார் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை அனுசரித்து பயங்கரவாதத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்டரிக் ராஜ்குமார் தலைமையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் சோபியா விமலராணி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருச்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.