திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் திருமலை கோடாப்பு கிராமத்தில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு விநாயகர், ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்பாம்பிகா சமேத, ஸ்ரீ பெரமணாத சுவாமி அய்யனார், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மாசி பெரியண்ண ஸ்வாமி, ஸ்ரீ மதுரவீரன் சுவாமி, ஸ்ரீ அரியவூர் விரதடி கருப்பு சுவாமி, ஸ்ரீ லாடசன்னாசி சுவாமி, ஸ்ரீ நாகப்ப சுவாமி, ஸ்ரீ காத்த வீர சுவாமி, ஸ்ரீ ஈஸ்வரர் சுவாமி, ஸ்ரீ பட்டவர் சுவாமி ஆகிய தெய்வங்களின் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த பத்தாம் தேதி முகூர்த்த கம்பம் நடப்பட்டு 13ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் லக்ஷ்மி ஓமம் கோ பூஜை மகா தேவாரத்துடன் தொடங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து 14 ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் கொண்டுவரப்பட்டு 15 ஆம் தேதி முதல் கால யாக பூஜையும், காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது .
அவனைத் தொடர்ந்து கம் புறப்பட்டு விமானங்கள் மற்றும் மூலவர் மகா அபிஷேகம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவிற்கு திமுக தில்லை நகர் பகுதி செயலாளரும் , கவுன்சிலருமான நாகராஜன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்று சென்றனர் மேலும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.