ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை எல்லை பகுதியான மண்டையூர் வடகாடு கிராமத்தில் அப்துல்கான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வேலை பார்த்து வருகிறார். அப்துல்கான் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததையடுத்து என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏக்கர் பரப்பிலான தோட்டத்தினை குத்தகைக்கு எடுத்து வேலை பார்த்து வருகிறார். 8 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளர்.இதேபோன்று, திருச்சி சுப்ரமணியபுரம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் ஜமால் முகமது. தஞ்சாவூர் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரது மகன் அப்துல் ரகுமான் (25) தனது தாய் மாமன் ஜமால் முகமதுவை நேற்று இரவு சந்திக்க வந்துள்ளார்.
அப்துல் ரகுமான் மற்றும் ஜமால் முகமது ஆகிய இருவரும் தடை செய்ய பட்ட அமைப்பில் உள்ளவர்களிடம் தொடர்பில் உள்ளனரா என்று என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அப்துல் ரகுமான் உறவினர் ஜப்பான் முகமது வீட்டில் நடைபெற்ற nia அதிகாரிகள் சோதனை தற்போது நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமானை சாலிய மங்கலத்திற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.