திருச்சி சமயபுரம் சோழன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( 47 ),இவர் கடந்த 1ம் தேதி இறுச்சக்கர வாகனத்தில் திருச்சி டோல்கேட்டை அடுத்த அருகே பளூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கினார்.உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் – இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையில் இருந்த செல்வராஜ்க்கு நேற்று மாலை மூளை செயல் இழந்தது.
இதனையடுத்து அரசு மருத்துவர்கள் செல்வராஜின் உறவினர்களை அழைத்து முறையாக ஆலோசனைகள் வழங்கினர் – செல்வராஜின் மகன் அசோக் மற்றும் மகள் கங்கா கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாக அப்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு இரண்டு சிறுநீரகம்,இதயம் மற்றும் கல்லீரலை எடுத்து முறைப்படி உடல் உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்..