ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கைக்கு தரை மார்க்கமாக பாதை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனுஷ்கோடிக்கு இடையே உள்ள ராமர் பாலம் பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான விஷயங்கள் பரிசலீக்கப்பட்டு வருகிறது. இந்தியா இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டாலும் இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இலங்கையில் காற்றாலை மூலம் 500 மெகாவாட் அளவிலான பெரிய காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் திருகோணமலை கிழக்கு துறைமுகம் அதற்கான கப்பல் போக்குவரத்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடல் அடியிலான குழாய் மூலமாக என்ணை மற்றும் கேஸ் பரிமாற்றம் தொடர்பான சேவைகளுக்கும் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில் எதிர்க்கட்சி கூட்டணியாக இருக்கிறோம். ரனில் விக்கிரமசிங் தலைமையிலான கட்சிக்கு எதிரான நிலைப் பாட்டியிருக்கிறோம். எங்களுக்கும் அவர்களுக்கும் கொள்கையில் உடன்பாடு குறைவு தான் எங்களை பொறுத்தமட்டில் தமிழக மீனவர்கள் இடையேயான முரண்பாடுகளை கையாள்வதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தமிழர்கள் மீள் குடியேற்றம் வாழ்வதற்கு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளுவோம். இந்திய அரசு எங்களுக்கு நாலாயிரம் மில்லியன் உதவிகளை செய்து, பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு உள்ளபோது இந்திய அரசு முன் வந்து உதவி செய்திருக்கிறது. பேர்ர் காலத்தில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான ஜெனிவா மனித உரிமை சபையில் எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் அழுத்தம் காரணமாக புதிய சட்டம் நிறைவேற்றி அதற்கான நீதிமன்ற நடவடிக்கை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எங்கள் தரப்பு வெற்றி பெற்றால் எது வரும் ஜனநாயகத் தேர்தலில் அதற்கான உத்தரவாதங்களை நாங்கள் கொடுப்போம். இந்திய தேர்தல் மூலமாக ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வெற்றி இருப்பது சாதனையாகும். அழுத்தமான எதிர்கட்சி அமைந்துள்ளது. ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் எங்களை வாழ்த்துக்கள் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *