இன்று ஜூலை 15ம் தேதி கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியம் வாளாடி ஊராட்சி பகுதியில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து புனித கபிரியேல் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் புனித கபிரியேல் பேராலயத்தின் பங்குத்தந்தை வில்லியம் அடைக்கலராஜ் பள்ளி தலைமை ஆசிரியை விக்டோரியா அண்ணம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.