திருச்சி பழைய பால்பண்ணை அருகே மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட 15 க்கும் மேற்பட்ட கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். வாடகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் அகற்றப்பட்டது. இடத்தின் உரிமையாளர் பாலசுப்ரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கடைகளை அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் கடைகள் அகற்றும் போது வாடகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடையில் உரிமையாளர் மாநகராட்சி அதிகாரியிடம் பல வருடங்களாக கடைக்கு வரி தண்ணி வரி கட்டி வந்துள்ளோம் இந்நிலையில் திடீரென கடையை காலி செய்ய சொல்வது நியாயமா என கேட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் காந்தி மார்க்கெட்டிலிருந்து பால்பண்ணை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.