திருச்சி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் ரீச்சிலிருந்து மாட்டு வண்டி வாயிலாக மணலை அள்ளி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் ரீச்சுகள் திருக்கப்படாததால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வேலை இல்லாமல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதழ் தலையிட்டு மணல் நிகழ்ச்சிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளர்களுடன் சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் ரீச்சுகளை திறந்தால் மட்டுமே திருச்சி மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வரும் சுமார் 2000-க்கும் அதிகமான மாட்டு வண்டி ஓட்டும் தொழிலாளர்களின் வாழ்வாரம் பாதுகாக்கப்படும் என்றும் இதன் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெற்றி மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர்.