குழந்தைகளுக்கு என பல் சிகிச்சை அளிப்பதற்காக நைட்ரஸ் ஆக்சைடு கான்ஷியஸ் செடேஷன் சேவை தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் முதல் முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த நைட்ரஸ் ஆக்சைடு என்பது பல் மருத்துவத்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உள் இழுக்கும் மயக்க மருந்தாகும். இந்த நவீன கருவி மூலம் ஆறு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வலி இல்லாமல் பல் மருத்துவம் செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை மேம்பாட்டிற்காக ரூபாய் 10 லட்சம் செலவில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அர்ஷியா பேகம், மருத்துவ கண்காணிப்பாளர் உதய அருணா மயக்கவியல் துறையின் தலைவர் இளங்கோவன் துணைத் தலைவர் சந்திரன் குழந்தைகள் சிறப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் சுரேஷ்குமார் நுண்ணுயிரியல் துணைத் தலைவர் ஞானகுரு பல் மருத்துவத்துறை தலைவர் புனிதா ஞான செல்வி பல் மருத்துவத்துறை துணைத் தலைவர் ராஜ்மோகன் மாவட்ட ஆரம்ப தலையீடு மையத்தின் குழந்தைகள் பல் பிரிவு மருத்துவர் காயத்ரி பிரபாகரன் பல் மருத்துவத்துறை உதவி பேராசிரியர்கள் செந்தில்நாதன் காமாட்சி அமுதவல்லி தலைமை செவிலியர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.