ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், மாநில அரசின் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் தாராநல்லூர் கீரைக்கடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் நிறைவுறையாற்றினார் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரங்கராஜன், பகுதி குழு உறுப்பினர்கள் ராமர், இளையராஜா, மணிகண்டன், ரமேஷ், நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.