திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் வசித்து வருபவர் ஜலாலுதீன் (52). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாஹிராபானு(48) இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் என்ற ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ஒரு மகன் திண்டுக்கல் பகுதியில் தங்கி படித்து வருகின்றனர். ஒரு மகள் திருமணமாகி வெளிநாட்டிலும் மற்றொரு மகள் மண்ணச்சநல்லூரில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியிலும் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக துறையூர் சென்ற தாஹிராபானு மற்றும் அவரது இரண்டாவது மகள் சென்றுள்ளனர். இரண்டு நாட்களாக பூட்டி இருங்கும் வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பின் முன்பக்க கதவை லாபகரமாக தாழ்பாலை உடைத்து வீட்டிற்குள் புகுந்து இரண்டு மூன்று பீரோவில் உள்ள நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று காலையில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தாஹிராபானு வீட்டின் பூட்டு உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பீரோவில் இருந்த 23 பவுன் நகை , வெள்ளி பொருள், 57ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது . இதையடுத்து இச்சம்பவம் குறித்து தாஹிராபானு உறவினர்கள் மண்ணச்சநல்லூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் ரகுமான் காவல் உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் ஜெகன் தலைமை காவலர் மகேஷ் குமார் , காவலர் ராம்கி சமூக இடத்திற்கு வந்து மோப்பனாய் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்பொழுது மண்ணச்சநல்லூர் லால்குடி சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது உடனடியாக திருடர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *