ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வழி முன்னேற்றங்கள் என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கணினி துணைத் தலைவர் உபேந்திரன் வரவேற்புரை ஆற்றிட கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் தலைமை உரை ஆற்றினார். கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பிச்சைமணி தொடக்க உரையாற்றினார் சிறப்பு விருந்தினராக பெங்களூரில் உள்ள இன்போசிஸ் ஜூனியர் துணைத் தலைவர் சேஷாத்திரி சக்கரவர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முதன்மை துணை முதல்வர் ஜோதி துணை முதல்வர் கிருஷ்ணன் குல முதன்மையர் முனைவர் மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த கருத்தரங்கில் கணினித்துறை உதவி பேராசிரியர் முனைவர் விஜய் ஆனந்த் ராஜமாணிக்கம் பசுமை அடித்தளத்தில் விளையாட்டுகளை மேம்படுத்துதல் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். அமெரிக்கா புருடே பல்கலைக்கழகத்தின் முனைவர் பிரேம் ஜெகதீசன் புதிய வடிவில் கற்றலும் மற்றும் அதன் பயன்பாடுகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார் திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சண்முக வடிவு செயற்கை உற்பத்தியும் நுண்ணறிவின் வலி ஆராய்ச்சிகளும் என்னும் தலைப்பில் உரையாற்றினர். இந்த கருத்தரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பிற கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.