திருச்சி மாவட்டம் அதவத்தூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதை கைவிடக் கோரி அதவத்தூர் கிராம பட்டதாரர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே வர அனுமதிக்காததால் கிராம மக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தின் போது கருப்பு கொடி ஏந்தியும் தேசியக்கொடி ஏந்தியும் விவசாய கொடியேந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து விவசாயி மாபா சின்னதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஓட்டு போட்ட மக்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக காந்தி கண்ட கிராம ராஜ்யத்தை அழிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் தற்போது அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இதனை தடுக்க வேண்டும் இதனை தடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அதவத்தூர் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார் .