திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்று வட்டாரத்திலுள்ள வார்டுகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த திருச்சி மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் கிராமம் புங்கனூர் ஊராட்சியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் ஊராட்சி முக்கியஸ்தர்கள் புங்கனூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்தனர். மேலும் எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.