தமிழ்நாடு ஏ ஐ டி யு சி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சமணத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட பொதுச் செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக ஒன்றிய அரசே புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், தமிழக ஆட்டோ செயலியை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க கோரியும் வரியில்லாமல் மானிய விலையில் பெட்ரோல் டீசல் கேஸ் வழங்க கோரியும்

நலவாரிய ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிட கோரியும் அநியாய ஆன்லைன் அபராதத்தை உடனடியாக கைவிடக் கோரியும் வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு வழங்கக் கூறும் திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோ சென்று பயணிகளை இறக்க அனுமதி அளிக்க கூறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஏ ஐ டி யு சி சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *