திருச்சி பொன்மலை கோட்டை பணிமனையில் SRES-யினர் மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத, தனியார்மய நாசகார கொள்கைகளை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணிமனையில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக 41 பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி 76000 பாதுகாப்பு துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதை கைவிடக்கோரியும், 30.6.2021 ல் இயற்றிய EDSO ( ESSENTIAL DEFENCE SERVICE ORDINANCE – 2021 ) அவசர சட்டத்தை திரும்ப பெற கோரியும், பாதுகாப்பு துறை தொழிற்சாலை ஊழியர்களை ஜனநாயகத்திற்கு விரோதமாக நசுக்கி , வேலை நிறுத்த உரிமையை பறிப்பதை கைவிடக் கோரியும், இரயில்வே உற்பத்தி பிரிவுகள் , பணிமனைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடக் கோரியும், இரயில்வே நிலங்களை , 15 இரயில்வே விளையாட்டு மைதானங்களை RLDA மூலம் தனியாருக்கு விற்பதை கைவிடக் கோரியும், 18 மாத DADR முடக்கியதை வாபஸ்பெற்று 01.07.2021 ல் உயர்த்தப்பட்ட DADR , அரியர்சுடன் வழங்கிடக் கோரியும், கொரோனா பரவலின்போது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைகளை பறிப்பதை கைவிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை அனைத்து ரயில்வே பணிமனைகளின் முன்பு தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தினர் (SRES) கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த போராட்டத்திற்கு SRES கோட்ட தலைவர் பவுல் ரெக்ஸ் தலைமை தாங்கினார். , துணை பொதுச்செயலாளர் இரகுபதி முன்னிலை வகிக்க. INTUC மாவட்ட தலைவர் வெங்கட் நாராயணன், மற்றும் பொன்மலை ரயில்வே பணிமனையை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் மத்திய அரசின் தொழிலாள நலவிரோத தனியார்மய கருப்பு சட்டங்களுக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களுடைய ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவித்தனர்.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation