திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அவர்களின் உத்தரவுபடி துணை ஆணையர் அவர்களின் தலைமையில் ராமகிருஷ்ணா பாலம் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில்
அவ்வழியாக வந்த TN 81 V 9681 EECCO மாருதி காரை சோதனை செய்ததில் காரின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது மேலும் இதனை கடத்தி வந்த காட்டடூரைச் சேர்ந்த ராஜலிங்கம் வயது 39 என்பவர் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.