திருச்சி பாஜக அலுவலகத்தில் இன்று மாலை திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல பகுதிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா செய்தியாளரிடம் கூறியதாவது…. பாஜக அமைப்பு தேர்தல் மற்றும் கிளை கமிட்டி தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி முதல் நடைபெறும், அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் மண்டல் கமிட்டி மற்றும் மாவட்ட அமைப்புக்கும் அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய தலைமை தேர்வு நடைபெறும். திமுக 62 ஆம் ஆண்டுக்கு முன்பு சென்று கொண்டிருக்கிறது, திமுகவின் அயலக அணி போதைபொருள் கடத்த மட்டுமே வைத்துள்ளனர் என்று எண்ணினோம் ஆனால் தற்போது தேசவிரோத செயலாற்றும் அமைப்பாக உள்ளது.
இந்தியாவின் இரு மாநிலங்கள் இல்லாமல் ஒரு இந்திய வரைபடத்தை திமுக ஐலக அணியினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், திமுகவில் சிறுபிள்ளைகள் தலையீட்டால் பல சிக்கல்கள் உருவாகி வருவதாக திமுகவின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர், மக்களும் இதனை எண்ணி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் என்கிற உதவாக்கரை ஆளுநர் பற்றி பேசிய பேச்சு மோசமாக உள்ளது, ஆளுநரை அடிப்பேன் என்று வகையில் உள்ளது. இந்த வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக எதிர்வினை ஆற்றினால் என்னவாக இருக்கும் என தெரிவித்த அவர், திமுகவின் தலைமை ஒரு கீழ்த்தரமாக உள்ளது எனவும் குற்றம் சாட்டினார். 62ல் நடக்காமல் போனது தற்போது தமிழகத்தில் நடக்கும், தேச விரோதிகள் கையில் தமிழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது ஒரு காலத்தில் காங்கிரஸ் கையில் இருந்த சிபிஐ (CBI) , பாஜகவின் ஆட்சியில் தவறாக பயன்படுத்துவதில்லை, அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது எடப்பாடி தரப்பினர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருமாவளவன் பட்டியல் சமுதாய மக்களுக்கான தலைவர் அல்ல, மாற்று சமுதாயத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அந்நிய நாட்டின் கைக்கூலியாக தமிழகத்தில் இந்துசமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் கோவில் சொத்துக்களை ஆட்டையபோடும் கட்சி என்றால் அது திமுக கட்சி என்பது மாவட்டம் தோறும் நடைபெறும் செயல்கள் மூலம் தெரிய வருகிறது நடிகர் விஜய் பெரியாரை பின்பற்றட்டும், இதன்மூலம் அவர் தனது நிறத்தை காட்டிக் கொள்வதை வரவேற்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். கேரளாவில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் ஒரு முடிந்துபோன சகாப்தம். தமிழக காவல்துறை பயங்கரவாதியை கூட கைது செய்யவில்லை, கஞ்சாவை பறிமுதல் செய்யும் போலீஸ் மற்ற வகை போதைபொருட்களை கைப்பற்று வதில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்நிகழ்வில் பாஜக மாநில, மாவட்ட- மாநகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.