அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக அனுசரிக்கப்படுவதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில்
லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பணியாளர் மற்றும் சட்டம் துணை மேலாளர் ரவி மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.