பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4.63 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அமாவாசை மண்டபம் மற்றும் குங்கும கூடம் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 25.61 கோடி மதிப்பீட்டில் பெருவளை வாய்க்கால் இரு கரைகளிலும் சாலை மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி,

புதிய நுழைவாயில் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி .இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற தலைவர் உறுப்பினர் கனிமொழி ரங்கபிரபு வசந்தகுமார் திமுக நகர செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்