திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் காலை முதலே மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது .அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, இன்று காலை, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், உறையூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி என பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து இரவு மற்றும் காலை நேரங்களில் பெய்து வரும் மழை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்