திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் நடை- 2024 விழிப்புணர்வு பேரணி. நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உறுதி மொழியில் குழந்தைகளுக்கான பாலின துன்புறுத்தல், குழந்தைகள் திருமணம். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்புக்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர், ,
இதனைத் தொடர்ந்துவிழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மேஜர் சரவணன் சாலை மத்திய பேருந்து நிலையம், வழியாக சேவா சங்கம் மேல்நிலைப் பள்ளியில் வந்து நிறைவடைந்தது, 500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்