முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 8- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தலைமையில் திருச்சி கோர்ட்டு அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிர்க்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் தில்லை நகர் பகுதி செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா ஏற்பாட்டில்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து விழி இழந்த பள்ளி மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பத்மநாபன் பகுதி செயலாளர் அன்பழகன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.