முன்னாள் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 8- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஆலோசனையின் பேரில் மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை செயலாளர் ஜவஹர்லால் நேரு, இணைச் செயலாளர் வசந்தி, அண்ணா தொழிற்சங்கம் கருமண்டபம் நடராஜன், தொகுதி அமைப்பாளர் செங்கல் மணி, ஐ.டி. மண்டல செயலாளர் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சௌந்தர், பகுதி செயலாளர்கள் சுதாகர், எஸ்.பி. கார்த்திகேயன்,, பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.