தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில். நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், வக்கீல்கள் ராஜசேகரன், வேங்கை சந்திரசேகர், சுப்பிரமணி, வையாபுரி, திருச்சி மாவட்ட தலைவர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவர் ராஜகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வருகிற ஜூலை 20ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜனதா தளம் சார்பில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் ஜனதா தளத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அகில இந்திய தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் இந்த மாநாட்டை நோக்கம் பிரிந்து கிடக்கும் ஜனதா தளத்தை இணைப்பதாகும்.மத்திய அரசு பல்கலைக் கழக மானியக்குழு சட்ட விதிகளை திருத்த, வரைவு மசோதாவை தயாரித்து அதில் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அந்த வரைவு மசோதாப்படி, பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஆளுநருக்கே வழங்கப்படும் என்று அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆளுநருக்கே துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கும்பட்சத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாநில அரசுகள் பல்கலைக் கழகங்களை நிர்வகிக்க பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. ஆகவே, மத்திய அரசு ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வரைவு மசோதாவை கைவிட வேண்டுமென மத்திய அரசை தமிழக ஜனதர்தளம் கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் போன்றவற்றில் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக துணை வேந்தர்கள் இல்லாமலேயே பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் கவனம் செலுத்தாமல் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதி மன்றம் 1 வார கால அவகாசத்திற்குள் ஆளுநர் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றமே உத்தரவினை பிறப்பிக்க நேரிடும். என்ற கருத்தை தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் உடனடியாக துணை வேந்தர்களை நியமன விஷயத்தில் அரசுடன் கலந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள். நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட அரசு தீவிர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது அரசு தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி, காவலர்களை அமர்த்தி போதை பொருள் விற்பதை தடுக்க வேண்டும் உண்மைான சமூக நீதியை நிலைநாட்ட எல்லா மக்களுக்கும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமநீதி கிடைத்திட ஒரே தீர்வு சாதிவாரி நடத்தி அந்தந்த சமுதாய மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கின்ற வகையில் அரசு உறுதி செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கொள்கிறது. கால்நடைகள் குறிப்பாக ஆடு வளர்ப்போர் வனத்துறையினரால் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். வனத்துறை சட்டத்தில் தக்க திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கால்நடை வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது குறித்து விளக்கமாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்