திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் சென்னு கிருஷ்ண முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

இந்தக் கூட்டத்தில் , மூலக்கொல்லைத் தெரு, வள்ளுவர் தெரு, சவேரியார் கோவில் தெரு , மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை ,ஜெனரல் பஜார், பென்சனர், தென்னூர், தெருபட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர் . பொதுமக்கள் அளித்த 52 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார் .முன்னதாக மேயர் அன்பழகன் அவர்கள் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *