திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணைமேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 41 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள். இம்மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் வார்டு குழு அலுவலகம், நகர் நல மையம் அலுவலர்கள் மற்றும், உதவிஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் , பணியாளர்கள் உள்ளிட்ட 67 நபர்களை கௌவுரவித்து பாராட்டி சான்றிதழ் மற்றும் சுழல் கேடயம் மேயர் அன்பழகன் வழங்கினார்.
மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளில் துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் விஜய் சந்திரன், மண்டலத்தலைவர்கள் ஆண்டாள்ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், செல்வராஜ் உதவிஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.