திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி ஜம்புரீ மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக இந்த விழாவானது மதியம் மூன்று மணி அளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதனால் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் சாரண சாரணியர் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இரண்டு மணி முதலே உச்சி வெயிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். அதிலும் சிலர் குடை பிடித்து படியும் சிலர் கைக்குட்டையை மற்றும் துப்பட்டாவை தலையில் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

இது ஒரு புறம் இருக்க பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி ஜம்புரீ மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை படம் மற்றும் வீடியோ எடுக்க வந்த செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை கட்சியினர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இது போதாது என்று உயரமான விழா மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் வீடியோ எடுக்காத வண்ணம் மறைத்தபடி அமர்ந்து கொண்டனர். இதனால் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் படம் மற்றும் வீடியோ எடுக்க முடியாமல் திணறினர்.

ஒதுங்கி நின்று வீடியோ படம் எடுங்கள் என்று சொன்னால் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் நாங்கள் அமைச்சரின் புகைப்படக்காரர்கள் நாங்கள் இப்படித்தான் படம் எடுப்போம் நீ படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நீ வா போ என்று ஒருமையில் பேசிய சம்பவம் நிகழ்ச்சியை வீடியோ படம் எடுக்க வந்த செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியையும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நிகழ்ச்சிக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களை ஆரம்பம் முதல் இறுதி வரை பத்திரிக்கையாளர்களை படம் எடுக்க விடாமல் அமைச்சரின் புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்களின் செயல்பாடு பத்திரிக்கையாளர்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்