தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டில் மீனவர் நலன் மற்றும் மீன் வளத்துறை சார்பில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மண்டல அலுவலகம், உதவி இயக்குநர் அலுவலகத்துடன் கூடிய பயிற்சி மைய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து புதிய கட்டிடத்தினை பார்வையிட்டார் .இந்நிகழ்வில், மீன் வளத்துறை மண்டல துணை இயக்குநர் ரவிச்சந்திரன், மீன் வளத்துறை செயற்பொறியாளர் ராஜ்குமார், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள். மீன் வளத்துறை உதவி இயக்குநர் குமரேசன். அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.