திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த அவரை விமான நிலையத்தில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர் புல்லட்லாரன்ஸ், மற்றும் கட்சியினர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சீமான் பரபரப்புக்காக ஏதோ பேசுகிறார் இது வந்து அரசியல் பொருத்தம் இல்லாதது கவன ஈர்ப்புக்காக பரபரப்புக்காக தன்னை நம்பி வரக்கூடிய இளைஞர்களின் உணர்ச்சிகளை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை நோக்கில் அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார் பெரியாருடைய வெங்காயம்தான் காங்கிரஸ் ஆட்சியை இந்த மண்ணிலே வீழ்த்தியது அந்த வெங்காயம்தான் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது பெரியாருடைய அந்த வெங்காயம்தான் இன்றைக்கும் சனாதர சக்திகளை தமிழ் நாட்டுக்குள்ளே நுழைய விடாமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவரைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் பெரியார் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய அளவில் சமூக நீதியின் பால் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான ஒரு தலைவர் இன்றைக்கு சர்வதேச அளவில் அறிவியல் பூர்வமாக அனைத்தையும் அணுகக்கூடிய ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு தலைவர் அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்

அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை அது ஒரு விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினை இல்லை தமிழ்நாட்டில் எவ்வளவோ பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் இருக்கின்றன விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் இருக்கின்றன வகுப்பு வாரியத்திற்குள்ளே தலையீடு செய்யக்கூடிய சட்ட மசோதாவை கொண்டு வந்திருக்கிற பாரதிய ஜனதா அரசை பற்றி அவர் வாய் திறக்கவில்லை சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பாஜக அரசை பற்றி அவர் பேசவில்லை ஆணவ கொலைகளைப் பற்றி பேசவில்லை தலித் மக்களுக்கு எதிராக நிகழ்கிற படுகொலைகளை பற்றி பேசவில்லை பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன தமிழின அரசியல் என்பது வேறு தமிழ்நாட்டு அரசியல் என்பது வேறு தமிழினம் என்பது விடுதலை தொடர்பான அரசியல் தமிழ்நாட்டில் வெறும் உரிமை தொடர்பான அரசியல் தமிழீழ விடுதலை அரசியலையும் தமிழ்நாட்டு உரிமை அரசியலையும் இணைத்து பேசுவது என்பது பொருத்தம் இல்லாததுஅவங்க 24 மணி நேரமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதை தாண்டி மக்கள் பிரச்சினைகளை பற்றி அவர்கள் பேசுவதில்லை திமுக அரசுக்கு எதிராக பேசுவது மட்டும் தான் அரசியல் என்று கருதுகிறார் மிக நல்லிணக்கம் பெரிய பதட்டம் எதுவும் இல்லை உத்தரபிரதேசத்தில் பிற மாநிலங்களில் நடப்பதை போன்று கொள்ளை கொலைகள் இல்லை ஆணவக் கொலைகள் பெரிய அளவிலே அங்கு தலைவிரித்தாடுவது போல் இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒப்பிட்டளவிலே பிற மாநிலத்தை பார்க்கிற போது தமிழ்நாடு மிக சுமூகமான முறையிலே இயங்கிக் கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட ஒரு அநீதியை இங்கே யார் பேசுகிறார்கள் இதை அண்ணாமலை இதை பற்றி என்ன சொல்ல போகிறாய்? இபிஎஸ் இதை கண்டிக்கவில்லை இதே வேங்கை வயல் பிரச்சனை சம்பந்தமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏன் கையில் எடுத்து போராடக்கூடாது ஏன் போராடவில்லை என்றால் அவர் அரசு எடுத்து நிலைப்பாடு சரி என்று ஒத்துக் கொள்கிறாரா என்று கேள்வி எழுகிறது மசோதாவை நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவுக்கு அனுப்புகிறபோது பெரும்பான்மையாக அதிலே பிஜேபி உறுப்பினர்கள் இருப்பார்கள் ஆகவே அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை மதிக்க மாட்டார்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு கணிப்பு இருந்தது அதுதான் இப்போது நடந்திருக்கிறது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் வெளியேற்றிவிட்டு அவர்கள் மற்ற ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் நம் மக்களவையிலும் அதைத்தான் செய்தார்கள் இப்போது நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவும் அதை தொடர்ந்து செய்து இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை ஒருபோதும் இந்த அரசு அன்றைக்கும் சரி இன்றைக்கு சரி மதித்ததில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்