தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கிராப் பட்டி பகுதியில் உள்ள முத்துசுந்தரம் இல்ல கூட்டாரங்கில் இன்று நடைபெற்றது ந்இத மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையேற்று நடத்தினார் அஞ்சலி தீர்மானத்தை மாநில செயலாளர் சையதுயூசுப்ஜான் முன்மொழிந்தார் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை திருச்சி மாவட்டத்தலைவர் ஜீவானந்தம் இளங்கோவன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்டத்தலைவர் பால்பாண்டி துவக்கவுரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அம்சராஜ் வேலை அறிக்கை முன் வைத்தும் போராட்ட முடிவுகள் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:- தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140- கார்ப்பரேட் கம்பெனிகள் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி வசூல் வேட்டை நடத்திடும் 5000 நிரந்தர அரசு பணியிடங்கள் ஒழிக்கப்படும் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் அதேபோல் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திடு மாநில நெடுஞ்சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை அரசே என்று நடத்த வேண்டும்
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்து கோரியும்,ஜனவரி 20-முதல் பிப்ரவரி 28 முடிய தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து மார்ச் 26- சென்னையில் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கையெழுத்து பிரதிகளுடன் கோரிக்கை சாசனம் வழங்கும் இயக்கம் நடத்துவது எனவும் , புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு ஊதியம் அகவிலைப்படி நிலுவையினை வழங்க வேண்டும் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்
சத்துணவு ஊழியர் அங்கன்வாடி ஊழியர் வருவாய் கிராம உதவியாளர் ஊர்ப் புற நூலகர் MRB செவிலியர்கள் PPP&COE உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் சட்டபூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் 10-02-2025 அன்று 24-மணி நேர தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நடைபெற உள்ளது இந்த 24- மணிநேர தர்ணா போராட்டத்தில் சாலைப் பணியாளர்கள் அனைவரும் பங்கு பெறுவது எனவும், மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் வருகிற 14ம் தேதி தலைநகரில் ஆர்ப்பாட்டமும், 25ம் தேதி மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம் ஆகிய போராட்ட இயக்கங்களில் அரசு ஊழியர் ஆசிரியர்களுடன் சாலைப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது