திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன்,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.