திருச்சி ராம்ஜி நகர் கே கள்ளிக்குடியில் NR IAS அகாடமியில் 47 வது வெற்றி விழா நடந்தது. இவ்விழாவிற்கு அகாடமி தலைவர் விஜயாலயன் தலைமை தாங்கினார். விழாவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் வெற்றியாளர்கள் அவர்களின் பெற்றோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். இதில் குரூப் 4 தேர்வில் இளநிலைவருவாய் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த் கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரது தாயார் யசோதை கூறும் போது, எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள அவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை நான் சித்தாள் வேலை செய்து என் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்தேன். இன்றைக்கு எனது மகன் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று எனது குடும்பத்துக்கு விளக்கேற்றியுள்ளார். மகனால் எங்கள் குடும்ப மதிப்பு உயர்ந்துள்ளது. எனது மகனின் வெற்றிக்கு வழிகாட்டிய NR IAS அகாடமி தலைவர் மற்றும் ஆசிரியர்களுக்குக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கமாக கூறினார்.

மேலும் ஆனந்தின் சகோதரி அனிதா பேசும் போது எங்கள் வீட்டை சுற்றி அரசு ஊழியர்களின் வீடாக இருக்கும். எனது தந்தை மது அருந்துவதால் எங்களை யாரும் மதிப்பதில்லை. ஆகவே எனது தாயார் எங்கள் ரெண்டு பேரிடமும் எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் அப்போதுதான் நமக்கு இந்த ஊரில் மரியாதை கிடைக்கும் என்பார். அவரது ஆசையை இன்றைக்கு எனது தம்பி நிறைவேற்றியுள்ளார் நானும் டிஎன்பிஎஸ்சி பயிற்சி பெற்று வருகிறேன். விரைவில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்