தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி மாவட்ட தலைநகரங்களில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அமலோற்பவம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் ஜெய்ஹிந்த் துவக்க உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திமுக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், பழைய ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரியும், நீதிமன்ற தீர்ப்பின்படி 80 வயது துவக்கத்தில் 20% கூடுதல் ஓய்வுதியத்தை வழங்க கோரியும் ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை சரி செய்ய கோரியும், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் துவக்க ஊதியம் வழங்கிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.