தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜு, மாநில துணைத்தலைவர் ஹரிஹரன், மாநில செயலாளர் பெரியண்ணன், மாநில துணைத்தலைவர் கோவிந்த பாண்டியன் விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மண்டல செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:-ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரியும், ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் தமிழக அரசு நிதியிலிருந்து வழங்குகின்ற ஊக்கத்தொகை பட்டுவாடா குறித்து ஆவின் பால் கொள்முதலில் ஐ எஸ் ஐ ஃபார்முலா அமல்படுத்த கோரியும், அரசு நிதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்ற ஊக்கத்தொகையை ஆவின் நிறுவனத்தின் பங்கு முதலாக மாற்றுகின்ற அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளை தவிர்த்திட கோரியும், தமிழக பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் புதிய நுகர்வோர் பால் கூட்டுறவு சங்கங்களை ஜிஎஸ்டி பதிவுடன் உருவாக்கி அந்த சங்கங்களின் மூலம் நகர்ப்புறவாள் மக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதை உறுதி செய்து ஆவின் நிறுவன வருவாயை அதிகரிக்க செய்யக் கோருவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் இந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க திருச்சி மண்டல செயற்குழு கூட்டத்தில் திருச்சி அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் மண்டல நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.