தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களிடம் கூறும்போது,வருகிற மே 5ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மதுராந்தகத்தில் வணிகர் அதிகார பிரகடன மாநாடு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து 7 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளார்கள். திருச்சி மாவட்டத்திலிருந்து 15000 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே வணிகர்கள் ஜிஎஸ்டி குப்பை வரி , கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆன்லைன் வர்த்தகம்போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஆகவே சாமானிய வணிகர்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவோம். இதுவே எங்களது பிரதான கோரிக்கையாக இருக்கும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எழுத்தப்பூர்வமாக உறுதி அளிக்கும் திசையில் ஆதரவு அளிப்போம். தமிழகத்தில் 30 சதவீதம் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகருக்கு வெளியே கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இப்போது நகருக்குள் வந்துவிட்டார்கள்.இந்த மாநாடு வணிகர்களுக்கு திருப்புமுனை மாநாடாக அமையும். கோரிக்கைகளை வென்றெடுக்குற மாநாடாக அமைய இருக்கிறது. இதுவரை 42 ஆயிரம் உறுப்பினர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளை நேரடியாக அழைப்பு விடுத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.