திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உமா இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் உள்ள 104 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே இந்த போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முதல் இடத்தை பிடித்துள்ளது.அதின் படி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு “சர்தார் பட்டேல்” சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நீடித்த ஆராய்ச்சி பணியில் வாழை மேம்பாடு, உற்பத்தி,பாதுகாப்பு மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் வாழை ஆராய்ச்சி மையம் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளது.