சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தேசிய பேரவை தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் தேசிய தலைவர் டாக்டர் இ டி சார்லஸ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில செயலாளர் டாக்டர் ஜான்சன் துரை, மாநில பொருளாளர் கிரிஸ்டோபர், மாநிலத் துணைத் தலைவர் ஏசுதாஸ், இளைஞர் அணி செயலாளர் எபினேசர், ஆசிரியர் பிரிவு செயலாளர் லூயிஸ் மற்றும் மார்ட்டின், வின்சென்ட் முன்னாள் பொருளாளர் தமிழ் சேனாவராயன், வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.