திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது.
1) பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தினால் வாடகை வண்டி ஓட்டுநர்கள் ஊரடங்கு காலம் முடிந்தும், வாகனங்கள் ஓடாமலும் பொருளாதார சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாடகை ஓட்டுநர் நிர்னயித்த தொகையை தரமறுப்பதாலும் வாகனங்கள் ஓடாமல் நிற்க நேரிடுவதால் EMI வீட்டு வாடகை குடும்ப செலவுனங்கள் செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .பள்ளி கூடங்கள் கல்லூரிகள் விரைவில் திறக்க மாணவர்களின் பெற்றோர்கள் அனுமதியுடன் விரைவில் திறக்கப்பட வேண்டும். இதனால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகிவிடும். ஆகையால் பள்ளி கூடங்கள் கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க உயர்நிலை பள்ளிகளில் மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களை நியமிக்கபடவேண்டும் என்று ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.