தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் என்று துவக்கி வைத்துள்ளார் இது தொடர்பாக நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது நாளை மறுநாள் முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்கம் 30 சதவீதம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திமுகவில் ஒரு கோடி m உறுப்பினர்கள் உள்ளனர் உறுப்பினர் சேர்க்கை மூலமாக அந்த எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமாகும். இந்த உறுப்பினர் சேர்க்கையின் மூலமாக வீடு வீடாக சென்று நாங்கள் மக்களை சந்திக்க உள்ளோம் திமுக அரசு செய்த சாதனைகள் ஒன்றிய அரசு எந்தெந்த வகையில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது என்பது குறித்து சொல் வோம் யாரையும் வற்புறுத்தி கட்சியில் உறுப்பினராக இணைக்க மாட்டோம் விருப்பப்பட்டவர்களை மட்டுமே இணைத்துக் கொள்வோம் அதே நேரத்தில் உங்களிடம் ஒன்றிய அரசு தமிழகத்தை எப்படி வங்கிக் கொள்வது என்பது குறித்து அனைவரிடமும் எடுத்துக் கூறுவோம்.
தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தான் பின்பற்றி வருகிறது பிறந்த பொழுதும் ஒன்றிய அரசு இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது அதை நாம் முறியடித்து வருகிறோம். பாஜக ஆளும் மகாராஷ்டிராத்திலும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து உள்ளார்கள். திருபுவனம் காவல் நிலைய இளைஞர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் ஆனால் அவர் முதல்வராக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். இளைஞர் மரண விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் வேறுயாரும் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். ஆனால் திமுக கூட்டணி மட்டும் தான் உறுதியாக உள்ளது. திமுக விற்கு யார் விருப்பப்பட்டு வந்தாலும் அவர்களை சேர்த்து கொள்வோம். திமுக வில் உட்கட்சி பிரச்சனை அண்ணன் தம்பி பிரச்சினை தான் அதை பேசி தீர்த்து கொள்வோம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமானால் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.இனிமேல் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு மூலம் எங்களின் செயல்படும் வேகத்தை கூட்டும். தேர்தலுக்கு பத்து மாதங்களுக்கு முன்பாகவே மக்களை சந்திக்க செல்கிறோம். தற்போது தொடங்குவதால் 50 சதவீத தேர்தல் பணி முன்பே முடிவடையும். மக்களிடம் நாங்கள் செய்த திட்டங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக வினர் செய்யாதது உள்ளிட்டவற்றை எடுத்து கூறுவோம். பேருந்து நிலையமே கட்டாமல் இருந்த அதிமுக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை என போராட்டம் செய்ய உள்ளார்கள். திருச்சி மாவட்டத்திற்கு சித்தா மருத்துவமனை, பல் மருத்துவமனை, மாநகராட்சி பள்ளிகளுக்கு புது கட்டிடம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருச்சிக்கு கேட்டுள்ளோம். எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து திமுக தலைவரும் கூட்டணி கட்சி தலைவரும் இணைந்து முடிவெடுப்பார்கள். திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்கும் எண்ணம் தற்போது இல்லை அதே நேரத்தில் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என முதல்வர் கூறியுள்ளார் என்றார்.