தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்பு குழுவின் தலைவருமான கே.வி. தங்கபாலு அவர்கள் இரண்டாம் கட்ட ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று அரியலூர் வந்தடைந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று அரியலூர் துறையூர் கொப்பம்பட்டி முசிறி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த பிறகு நேற்று மாலை திருச்சி வந்தடைந்தனர் பின்பு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டார் பின்பு பொன்மலைப்பட்டி காந்திநகர் பகுதியில் உள்ள காமராஜர் அவர்களுக்கு சொந்தமான நாடக சபா கட்டிடம் மற்றும் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள காமராஜர் மன்ற கட்டிடம் மற்றும் ராஜா காலனி பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட சி ஐ டி யு சொந்தமான கவுன்சில் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு சங்கையாண்டபுரம் பகுதியில் உள்ள காமராஜர் மற்றும் கட்டிடம் இறுதியாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தை பார்வையிட்டார் பிறகு நேற்று இரவு திருச்சியில் தங்கி இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தியா சேகர் கிரானைட் தொழிற்சாலை 1963 ஆம் ஆண்டு தமிழக உள்துறை அமைச்சராக இருந்த கக்கஞ்சி அவர்களால் intuc சொந்தமான இடத்தை பார்வையிட்டார். முன்னதாக மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேரு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த ஆய்வின்போது மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமசுப்பு இணைச் செயலாளர் நித்தின் கும்பல்கர் முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் . மாவட்டத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் கோவிந்தராஜன் நகரத் தலைவர் முருகேசன் மாநில செயலாளர் ரமேஷ் மணப்பாறை வட்டார தலைவர்கள் சத்தியசீலன் சிவசண்முகம் வையம்பட்டி செல்வம் மருங்காபுரி குழந்தைவேல் ராதாகிருஷ்ணன் குமார் புருஷோத்தமன் சரோஜா தேவி வீரபாண்டி ஆகியோர் உடன் இருந்தனர் இதனைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார் அதன் பிறகு திருவாரூர் நாகை மயிலாடுதுறை கும்பகோணம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகின்றனர்.