திமுக அரசைக் கண்டித்தும் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மாரீஸ் ரெயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கவும், திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஆனால் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களும் செயல்படாமலும், நடைமுறை படுத்தப்படாமலும் உள்ளது. 3 சிலைகள் வைப்பதற்காக பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதா? சினிமா ஷூட்டிங் போல் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. என பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்று முக்கிய நியாயமான பிரச்சனைகளை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைக்கு திருச்சியில் நடைபெற்றிருக்கிறது. மிகப்பெரிய விளம்பர போட்டோ ஷூட் போல நடத்தப்பட்ட திறக்கப்பட்ட பேருந்து நிலையம் இதுவரை மக்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. பேருந்துகள் வந்து செல்வதாக தெரிவதில்லை பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக திறக்கப்பட்டது போல் திருச்சி பஞ்சபூர் பேருந்து நிலையத்தை அவசரமாக திறந்து பொதுமக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.இதனை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலம் விரைந்து முடிக்காததை கண்டித்தும், திருச்சியில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் திட்ட பணிகளால் பொதுமக்கள் அவதியுறுவதை கண்டித்தும் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளோம் இனியாவது இந்த அரசு மாவட்ட அமைச்சர்கள் விழித்து மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்துகிறோம். திருச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களின் போஸ்ட் பூசினால் தான் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது என மக்கள் பேசி வருகிறார்கள். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளால் இரண்டரை ஆண்டு காலத்தில் 1850 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை இங்கு உள்ள அமைச்சர்கள் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட காவல்துறை ஏன் கண்டு கொள்ளாமல் உள்ளது என அதிமுக கேள்வி எழுப்புகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் திருச்சியில் மாபெரும் வளர்ச்சி அடைந்தது. பேரறிஞர் அண்ணா சொல்லியது போல் தெருவிலும் தேநீர் கடையிலும் ஆட்சியின் அவல நிலை பற்றி பேசும்போது வாக்குச்சாவடிகள் முடிவு பெற்று ஆட்சி மாற்றம் நடைபெறும் என பேரறிஞர் அண்ணா கூறியதாக நான் கூறியுள்ளேன். அதிமுக தலைமையில் எடப்பாடி யார் முதலமைச்சராக வருவார். குடிநீரில் கழிவு நீர் கலப்பதை குடிநீர் வடிகால் வாரியம் கண்காணிக்க வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி ரத்தினவேல், மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, அதிமுக திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்