திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து முருகர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சரண்ராஜ் வயது 23 மற்றும் விக்கி என்ற விக்னேஷ் வயது 20 ஆகிய இருவரும் தங்கள் கிராமத்திலிருந்து துறையூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை சரண்ராஜ் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் முந்தி செல்ல முற்பட்டபோது எதிர்பாரத விதமாக அவர்களது இருங்க வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சரண்ராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார் பலத்த காயம் அடைந்த சரண்ராஜை பகுதியில் சென்றவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் உயிருக்கு போராடிய சரண்ராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.