சட்டம் – ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார். அதன்படி 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும்.

இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்.” என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப் படை மைதானத்தில் உள்ள காவலர்கள் நினைவிடத்தில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்திய துப்பாக்கி வகைகள் பள்ளி மாணவ மாணவிகளுக்காக கண்காட்சி படுத்தப்பட்டிருந்தது இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *