தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 13ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய பகுதிகளில் இருந்து தனது சுற்று பயணத்தை துவங்க உள்ளார். இந்நிலையில் அனுமதி வேண்டி திருச்சி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று விமான மூலம் திருச்சி வருகை தந்தார் . அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க மறுப்பு தெரிவித்து சென்றார் மேலும் திருச்சி விமான நிலையம் பயணிகள் வருகைப் பகுதியில் அவர் வருகை தந்த நிலையில் அப்போது த வெ க கட்சியினர் முண்டியடித்து அவரை காண ஓடினர் , அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு பரபரப்பு ஏற்பட்டது
தொடர்ந்து திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வரசக்தி வல்லப விநாயகர் கோவிலில் அனுமதி கடிதத்தை வைத்து வழிபாடு மற்றும் சாமி தரிசனம் செய்தார். அப்போது கட்சியினர் சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தி வைத்து இருந்தனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் ஆம்புலன்ஸ் செல்ல சிரமமம் ஏற்பட்டது. காவல்துறையினர் வாகனத்தை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கோவிலில் இருந்து மாநகர காவல்துறை அலுவலம் சென்றார் ஆனந்த் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது