மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய், வஃக்ப் ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய், மற்றும் வாக்குத் திருட்டு முறைகேட்டை கண்டித்து மதுரை எழுச்சிப் பேரணி மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ மற்றும் பொது செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா ஆகியோர் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்களுக்கு வீரவால் வழங்கினர். இப்பொதுகூட்டத்தில் சமூக நல ஆர்வலர்கள், ஜமாத் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.