திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து மொழி – மானம் -காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று ஒவ்வொரு வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்ப்பு குறித்தும் செப்டம்பர் 20 அன்று நடைபெறும் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பற்றிய விவரங்களை குறித்தது பேசினார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் , எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம் தங்களை முன்னிறுத்தி யார் என்ன செய்தார்கள் நாங்கள் வந்தால் என்ன செய்வோம் என கூறுவது வழக்கம் நேற்று சென்னையில் முதல்வர் கையால் பணி ஆணை வழங்கி ஆக்கபூர்வமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.. நேற்று விஜய் தொண்டர்களிடம் பேசும்போது கேக்கலை கேக்கலை என கூறி உள்ளார் கேக்கல கேக்கல என்பதை விட நீங்கள் திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கலை நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் திருச்சியில் 128 கோடி மதிப்பீட்டில் அண்ணா கனரக வாகன சரக்கு முனையம், 236 கோடி மதிப்பீட்டில் பெரியார் பெயரில் காய்கறி அங்காடி , 408 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூர் பேருந்து முனையம் ஏர்போர்ட்-க்கு நிகராக அமைந்து உள்ளது , 400 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க், மணப்பாறையில் சிப்காட், மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வந்துள்ளது  திருவெறும்பூர் பகுதியில் அரசு மாதிரி பள்ளி , விடுதி , ஒலிம்பிக் அகாடமி, சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ளது

பொங்கல் அன்று பிரம்மாண்ட ஜல்லிக்கட்டை நடத்த உள்ளோம் திருச்சி கிழக்கு தொகுதியில் காமராஜர் பெயரில் நூலகம் அமையவுள்ளது, மாநகராட்சி பகுதியில் 7.75கோடி மதிப்பீட்டில் 4 கல்விசார் மையம் நூலக வசதியுடன் அமைத்து உள்ளோம், பறவைகள் பூங்கா, மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது அதேபோல பல்வேறு நலத்திட்டம் வழங்கி உள்ளோம் மேலும் காலை உணவு திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 1200 பள்ளிகளில் 69369 மாணவர்கள் பயனடைக்கின்றனர் , நான் முதல்வன் திட்டம் மூலம் 68000 இளைஞர்கள் பயன்பெற்று உள்ளனர் கலைஞர் உரிமைத் தொகை 4.42 லட்சம் குடும்பங்கள் பயன்படுகின்றனர் , விடியல் பயணம், 73000 பட்டா வழங்கி உள்ளோம் , மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் , உங்களுடன் ஸ்டாலின் , தாயுமானவர் திட்டம் உள்ளிட்டவை திருச்சி மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என நான் சொல்வது குறைவு பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம் அமைச்சர்களாக திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம் திருச்சி மாவட்டத்திற்கு திட்டம் செல்கிறது என யாராலும் கூறினாலும் தமிழ்நாட்டின் மையப் பகுதி திருச்சி என கூறுவார் திருச்சி தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக உருவாக அனைத்து திட்டங்களும் செய்து உள்ளோம் நான்கரை ஆண்டு காலத்தில் திருச்சிக்கு எவ்வளவு முடியுமோ செய்துள்ளோம் இன்னும் செய்யவேண்டும் என ஆசை  எனவே விஜய் இது நாங்கள் செய்துள்ளோம் இது செய்யவில்லை என கூற வேண்டும் பொத்தம் பொதுவாக கூறக்கூடாது அதை அறிவார்ந்த திருச்சி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எதையும் பகுத்தறிந்து பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

பொதுவாக கட்டுபாடுகள் விதிப்பது உண்டானது நேற்று விமான நிலையத்திலிருந்து வரும்போது நமது வரிப்பணத்தில் கட்டப்பட்டவைகளை மொத்தமாக சிதைத்து விட்டு செல்வதை பார்ப்பது வயிற்று எரிச்சலாக உள்ளது மேலும் சையது முதுஷா பள்ளியில் ஏறி மேற்கூரை உடைத்து அங்குள்ள கழிப்பறையை வீணடித்து சென்று உள்ளனர் . கும்பலில் சந்தோஷமாக இருங்கள் யாரையும் நாங்கள் எதிரியாக பார்ப்பது இல்லை என தெரிவித்தார். முதல் பிரச்சாரத்தில் பல இளைஞர்கள் வந்துள்ளனர் இளைஞர்களுக்கு நாட்டு நடப்பு பற்றி சொல்லவேண்டும் குழந்தைகளை மனதை பிடித்து விட்டேன் எனக் கூறுபவர் கொள்கை எதிரி ஏன் இன்னும் கல்வி நிதி விடுவிக்கவில்லை அதை ஏன் என பேச வேண்டும், SIR குறித்து பேச வேண்டும் இப்படி நாட்டு மக்களுக்கு தேவையாதை பேச வேண்டும் அவர் குறுகிய மனதுடன் பேசி உள்ளார் என தோன்றுகிறது. சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் உரிய பதில் கூறி உள்ளார் என தெரிவித்தார் தேர்தல் வருவதால் உண்மைத்தன்மை அறியாமல் பேசி வருகின்றனர் ராகுல் காந்தியின் வாக்குரிமை குறித்து விஜய் பேசியது மேலும் காங்கிரஸ் மீது விமர்சனம் செய்யாதது காங்கிரசை கூட்டணிக்கு இழுக்க முயற்சியா என்ற கேள்விக்கு? இதை அரசியல் சார்ந்து பார்க்கவில்லை ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பது திமுகவின் குரலாகவே பார்க்கிறேன் பெரம்பலூர் பரப்புரையை விஜய் மேற்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு? விஜய்க்கு திட்டமிடல் இல்லை பேசும்போதே மைக் ஆஃப் ஆகிவிட்டது என தெரிவித்ததார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *