தேசிய முற்போக்கு திராவிட கழக 21 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலின் கீழ் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். மனம் உருகி விநாயகரிடம் வேண்டிய பிரேமலதா விஜயகாந்த் பிரகாரத்தை சுற்றி வந்து சிதறு தேங்காய் உடைத்தார்.
பின்னர் அங்கிருந்த வியாபாரிகள் பிரேமலதா விஜயகாந்திடம் பக்தி படங்களை பரிசளித்தனர். அவர்களுக்கு கட்சி துவக்க நாளை முன்னிட்டு இனிப்புகளை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் . வழங்கினார் பின்னர் வெளியில் வந்து கோவில் வாயிலில் நின்றிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.