தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிகழ்வில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், துணைச்செயலாளர் பத்மநாதன், ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் ஞானசேகர்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர். ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, ரோஜர், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார் துணை தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.