தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழிய நலச் சங்கம் சார்பில் மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளதை போல் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 153ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என அறிவித்ததை செயல்படுத்திட வலியுறுத்தி கோரிக்கை மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த கோரிக்கை மாநாட்டில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பழனிவேல் ராஜா வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் துவக்க உரையாற்றினார்.மாநில பொதுச் செயலாளர் சேரலாதன் கோரிக்கை உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கோரிக்கை மாநாடு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு செல்வராஜ், இயக்குனர் தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமாயி, மாநில அமைப்பு செயலாளர் கருப்புசாமி, மாநிலத் துணைத் தலைவர் ஜெகஜோதி, நிர்வாகிகள் சிவமுருகன், பழனிவேல், ராஜன், சுரேஷ், கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.